இன்று நண்பகல் 2 மணி முதல் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையைத் தொடர்ந்து, பண்டார் பாரு மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
பண்டார் பாரு மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி, லெப்டினன்ட் (PA) அப்துல் ரஹீம் கைருடின் கூறுகையில், மாலை 4.30 மணி நிலவரப்படி, Kampung Seribu Relong, Kampung Sungai Itam Dalam dan Kampung Sungai Terap ஆகியவை இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன என்றார்.
“பாதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 0.5 மீட்டர் நீர்மட்டம் உள்ளது.”
அங்கு நீர்வரத்து அதுகரித்துள்ளதாலும், அங்குள்ள பல ஆறுகளின் நீர் மட்டம் அபாய அளவை தாண்டியுள்ளதால், மக்கள் விளிப்புடன் இருக்குமாறு அப்துல் ரஹீம் அறுவுறுத்தினார்.








