பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பின் குடும்பத்தினருக்கு மலேசியா இரங்கல்

பாகிஸ்தானின் முன்னாள் அதிபரும், ராணுவத் தளபதியுமான ஜெனரல் பர்வேஸ் முஷாரப் நேற்று மரணமடைந்தார். அவரது குடும்பத்தினருக்கு மலேசியா இன்று தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள பதிவில், முஷாரப்பின் மறைவு குறித்து தானும் அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயிலும் வருத்தமடைந்ததாகக் கூறினார்.

மலேசியா எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது மற்றும் ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பின் குடும்பத்திற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் பலத்தை வழங்கட்டும் என்று அவர் கூறினார். முஷாரப் தனது 79வது வயதில் நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் காலமானார்.

1999 ஆம் ஆண்டு இரத்தமில்லாத ஆட்சிக்கவிழ்ப்பின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய முஷாரப், 2008 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் பதவி நீக்கத்தை எதிர்கொண்டு அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக 2016-ம் ஆண்டு பாகிஸ்தானை விட்டு துபாய் சென்று அங்கு  வாழ்ந்து வந்தார். முஷாரப்பிற்கு  amyloidosis நோய் என அடையாளம் காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here