துருக்கியே நிலநடுக்கம்: மலேசியா 70 தேடுதல் மற்றும் மீட்புப் பணியாளர்களை அனுப்பியது

தென் துருக்கியேயில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கான தேடல் மற்றும் மீட்பு (SAR) முயற்சிகளுக்கு உதவும் வகையில், மலேசியா சிறப்பு பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவை (SMART) துருக்கியேக்கு அனுப்பியது.

உடனடியாக SAR குழுவை துருக்கியேக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விஸ்மா புத்ரா மற்றும் பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஆர்மிசான் முகமட் அலி ஆகியோருக்கு (சபா மற்றும் சரவாக் விவகாரங்கள் மற்றும் சிறப்புப் பணிகள்) பணித்ததாக, வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் கூறினார்.

பிரதமர் துறையின் கீழ் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) வெளியுறவு அமைச்சகம், துருக்கியேயில் உள்ள மலேசிய தூதரகம் மற்றும் மலேசியாவில் உள்ள துருக்கியே தூதரகம் ஆகியவை இணைந்து இந்த நடவடிக்கையை ஒருங்கிணைத்து மேற்கொள்வதாக, அவர் நேற்று திங்கட்கிழமை (பிப்ரவரி 6) கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் SAR பணியாளர்களை அனுப்பிவைக்கும் நிகழ்வின்போது, செய்தியாளர்களிடம் பேசினார்.

காசியான்டெப், Şanlıurfa மற்றும் Adana ஆகிய பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 12 மலேசியர்கள் துருக்கியிலுள்ள மலேசியத் தூதரகத்தைத்தை தொடர்பு கொண்டதாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ததாகவும் ஜாம்ப்ரி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here