ஈப்போவில் 14 வயது சிறுமி ஒருவரை காணவில்லை

ஈப்போவை சேர்ந்த 14 வயது சிறுமியை இரண்டு மாதங்களாகக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் புகாரளித்ததாக, ஈப்போ மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் யஹாயா ஹாசன் தெரிவித்தார்.

மை யென் துய் என அடையாளம் காணப்பட்ட வியட்நாமிய சிறுமி, கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி தனது பெற்றோரின் அனுமதியின்றி வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்பட்டது.

“அச்சிறுமியின் மாற்றாந்தாய் முதலில் தன் மகளைத் தானே கண்டுபிடிக்க முயன்றார் என்றும், அது முடியாமல்போனதால் சமீபத்தில் காவல்துறையில் புகார் அளித்தார் என்றும் அவர் கூறினார்.

மாய் தன் காதலனுடன் ஓடிவிட்டதாக அவரது தாயார் நம்பினார் என்றும், ஜனவரி மாத நடுப்பகுதியில் சிறுமி மாய் அவர்களைத் தொடர்பு கொண்டார் என்றும், ஆனால் அவள் இருக்கும் இடத்தை அவர்களிடம் சொல்லவில்லை” என்றும் யஹாயா கூறினார்.

மாய் காணாமல் போனது இது மூன்றாவது முறையாகும்.

“முதல் முறை சென்ற வருடம் செப்டம்பரில், குறித்த சிறுமி எட்டு நாட்கள் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தார், பின்னர் அக்டோபரில் ஆறு நாட்கள் வீட்டை விட்டு காணாமல்போயுள்ளார் என்றும் அவர் கூறினார்.

மாய் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் சார்ஜென்ட் சுலைமான் ஷாபியை 013 523 2296 அல்லது ஈப்போ காவல் மாவட்ட அலுவலகம் 05 245 1500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here