தேடுதல் மற்றும் மீட்பு பணிக்காக துருக்கியே செல்லும் இரண்டாவது குழுவில் Denti மற்றும் Frankie மோப்ப நாய்கள்

தெற்கு துருக்கியேயில் 100 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிக்காக துருக்கியே செல்லும் இரண்டாவது குழுவில், Denti மற்றும் Frankie மோப்ப நாய்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

மலேசியாவில் இருந்து துருக்கியே செல்லும் தேடல் மற்றும் மீட்பு குழுவின் இரண்டாவது தொகுதியில், 20 சிறப்பு மலேசிய பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழு (SMART) பணியாளர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் 30 பணியாளர்கள் மற்றும் குடிமைத் தற்காப்புப் படையின் 30 உறுப்பினர்கள் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

“இந்த மோப்ப நாய்களை மீட்பு குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டதன்  நோக்கம், அங்கு (மீட்பு) முயற்சியை அதிகப்படுத்துவதே ஆகும், ஏனெனில் அவை பாதிக்கப்பட்டவர்களின் இருப்பிடங்களை திறமையாக கண்டுபிடிக்கும் ” என்று JBPM இன் செயல்பாட்டு மீட்புக் குழுவின் (STORM) தலைமை தளபதி, இஸ்மாயில் அப்துல் கானி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களை, உயிருடன் அல்லது இறந்தவர்களைக் கண்டறிய நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக இஸ்மாயில் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here