RM250,000 மதிப்புள்ள கடத்தல் சிகரெட்டுகளை திரெங்கானு கடல்சார் அமலாக்கத் துறை கைப்பற்றியது

நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில், கோலா பெசூட் முகத்துவாரப் பகுதியில் மலேசிய கடல்சார் அமலாக்க துறையினர் மேற்கொண்ட Ops Serop சோதனை நடவடிக்கையில், RM250,000 மதிப்புள்ள கடத்தல் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதாக திரெங்கானு MMEA இயக்குனர், கடல்சார் கேப்டன் முகமட் கைருலனுார் அப்துல் மஜிட் கூறினார்.

“பிப்ரவரி 7 அன்று ரோந்து சென்றபோது, பெசூட் கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு இயந்திரப் படகு நகர்வதை நாங்கள் கண்டறிந்தோம், ஆனால் எங்கள் ரோந்துப் படகு இருப்பதை உணர்ந்து படகிலிருந்த சந்தேக நபர் ஆழமற்ற கடலில் குதித்து தப்பி ஓடினார்” என்று, அவர் இன்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அதே நேரத்தில் கோலா பெசூட் முகத்துவாரத்தில் சந்தேகத்தின் பேரில் ஒரு லோரியை ஆய்வு செய்ததில், உள்ளூர் என்று நம்பப்படும் சந்தேக நபர், லோரியில் 410,000 சிகரெட்டுகள் அடங்கிய நீல நிற பிளாஸ்டிக் பொட்டலத்தை விட்டுவிட்டு தப்பிச் சென்றார்.

குறித்த சிகரெட் கடத்தல் கும்பல் கடல் வழியாக சிகரெட்டுகளை கடத்துவதும், சிறிய படகுகள் மூலம் தரைக்கு மாற்றுவதும் அவர்களின் பிரதான செயற்பாடு என நம்பப்படுகிறது, கரைக்கு வந்ததும் அங்கு சில இடங்களில் சிகரெட்டுகளை சேகரிக்க லோரிகள் காத்திருக்கின்றன என்று அவர் மேலும் கூறினார்.

இந்த வழக்கு சுங்கச் சட்டம் 1967 இன் பிரிவு 135 (1)(d) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது, இது பொருட்களின் மதிப்பை விட 20 மடங்கு அபராதம் அல்லது RM500,000 அல்லது ஆறு மாதங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கிறது, அல்லது ஐந்து ஆண்டுகள் சிறை அல்லது இரண்டும் விதிக்க வழி செய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here