தொழிலாளர் பற்றாக்குறையால் முட்டை விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது என்கிறார் மாட் சாபு

நோன்பு மற்றும் ஹரிராயா பண்டிகையை முன்னிட்டு கோழி முட்டை வரத்து குறைவதற்கு காரணமான தொழிலாளர் பற்றாக்குறையை வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகம் சமாளிக்கும் என்று அதன் அமைச்சர் முகமது சாபு கூறுகிறார்.

இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க, தனது அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் மனிதவள அமைச்சகத்துடன் இணைந்து விவசாயம் மற்றும் பிற துறைகளில் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து வருவதாக அவர் கூறினார்.

ஒவ்வொரு முறை பண்டிகையின் போதும், கோழி முட்டைகளின் நுகர்வு அதிகமாக இருக்கும். இந்த முட்டை தட்டுப்பாடு பிரச்சனை மற்ற நாடுகளிலும் உள்ளது. ரம்ஜான் வந்தவுடன், முட்டை மற்றும் பிற பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கும். அதனால்தான் முட்டை உற்பத்தியை இரட்டிப்பாக்க முட்டை சப்ளையர்களுடன் ஆலோசிக்க வேண்டும்.

லவஅவர்களிடம் போதுமான தொழிலாளர்கள் இல்லை என்றால், தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எளிதான வழியை வழங்க முயற்சிப்போம். தொழில்முனைவோரின் முக்கிய பிரச்சனை, உணவுப் பொருட்களின் விலை உயர்வு தவிர, தொழிலாளர்கள் பற்றாக்குறையாகும் என்று அவர் இன்று இங்கு பாலஸ்தீன கோலாலம்பூர் 2023 மாநாட்டில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

எதிர்வரும் ஹரிராயா பண்டிகை காலத்தை முன்னிட்டு கோழி முட்டை தட்டுப்பாட்டினால் தமது வியாபாரம் பாதிக்கப்படும் என ஹரிராயா பலகாரம் தயாரிப்பாளர்கள் முன்னதாக கவலை வெளியிட்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here