நாட்டின் கடன் பிரச்சினையை தீர்க்க GST -ஐ மீண்டும் நடைமுறைப்படுத்தும் எண்ணம் இல்லை என்கிறார் பிரதமர்

நாட்டின் கடன் பிரச்சினையை தீர்க்க பொருட்கள் மற்றும் சேவை வரியை (GST) மீண்டும் நடைமுறைப்படுத்தவோ அல்லது வேறு எந்த பரந்த அடிப்படையிலான நுகர்வு வரியையும் அறிமுகப்படுத்தவோ அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கை செலவினங்களைக் குறைப்பதற்கும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 82 சதவீதத்திற்குச் சமமான RM1.5 டிரில்லியன் மதிப்புள்ள அரசாங்கத்தின் பொறுப்புகள் மற்றும் கடனைத் தீர்க்கும் முயற்சியில் வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று , நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார் கூறினார்.

உதாரணமாக “செல்வந்தர்களுக்கான மானியத்தைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று, இன்று நாடாளுமன்றத்தில் நடந்த கேள்வி பதில் அமர்வில் அவர் இவ்வாறு கூறினார்.

முந்தைய அரசாங்கம் மின் கட்டண விகிதங்களை உயர்த்த திட்டமிட்டிருந்த நிலையில், தற்போதைய ஒற்றுமை அரசாங்கம் அந்த திட்டத்தை கைவிட்டு, அதாவது உணவுப் பாதுகாப்பை கையாளும் நிறுவனங்கள் தவிர, T20, பெரியநிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் மீது மட்டுமே மின் கட்டண உயர்வை விதிக்க முடிவு செய்துள்ளது என்று மேலும் கூறினார்.

நாட்டின் கடன் சுமையைக் குறைக்க அரசாங்கம் புதிய வரிகளை அறிமுகப்படுத்துமா என்ற வோங் கா வோ (PH-Taiping) இன் துணைக் கேள்விக்கு அன்வார் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here