ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்த முதல் பாகிஸ்தான் நடிகர் காலமானார்

பாகிஸ்தான் நாட்டின் பிரபல நடிகர் ஷியா முகைதின் (வயது 91). இவர் ‘லாரன்ஸ் ஆப் அரபிக்’ என்ற ஹாலிவுட் படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் ஹாலிவுட் படத்தில் நடித்த முதல் பாகிஸ்தான் நடிகர் என்ற பெருமையை முகைதின் பெற்றார்.

இதன் பின் பல்வேறு படங்களில் நடித்த இவர் டைரக்டராகவும், தயாரிப்பாளராகவும் முகைதின் பணியாற்றியுள்ளார். இதன் பின் இங்கிலாந்து திரைத்துறையில் சீரியல் நிகழ்ச்சிகளில் நடித்தும் மிகவும் பிரபலமானார். இவர் பாகிஸ்தான் திரைத்துறையிலும் பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

இதனிடையே, பாகிஸ்தானின் கராச்சியில் வசித்துவந்த முகைதினுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது.  இதையடுத்து அவர் கராச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நடிகர் ஷியா முகைதின் இன்று காலை காலமானார். வயது முதிர்வு காரணமாக ஷியா முகைதினின் காலமானார். அவரது மரைவிற்கு பாகிஸ்தான் பிரதமர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here