70 கிலோகிராம் கெத்தும் இலைகள், 120 லிட்டர் கெத்தும் நீர் வைத்திருந்த ஆடவர் கைது

ஜாலான் பாருவில் உள்ள ஒரு குடிசையில் இன்று போலீசார் நடத்திய சோதனையில், 70 கிலோகிராம் கெத்தும் இலைகளை பறிமுதல் செய்ததுடன் உள்ளூர் ஆடவர் ஒருவரையும் கைது செய்தனர்.

உளவுத்துறை தகவலின் அடிப்படையில், கெத்தும் நீர் பதப்படுத்தும் இடமாக செயற்பட்ட அந்தக் குடிசை சோதனைக்குட்படுத்தப்பட்டது.

மேலும் அவரிடமிருந்து பதப்படுத்தத் தயாராக இருந்த 120 லிட்டர் கெத்தும் நீர் என சந்தேகிக்கப்படும் திரவத்தையும், அவற்றைப் பதப்படுத்துவதற்கான உபகரணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

“சந்தேகநபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு RM3,900 என மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று பாலிக் பூலாவ் போலீஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விஷம் சட்டம் 1952 பிரிவு 30(3)ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here