மாநில தேர்தல் தொடர்பில் கலந்தாலோசிக்க சிலாங்கூர் மந்திரி பெசாரை சந்திக்கிறார் பினாங்கு முதல்வர்

நாட்டின் 6 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தல்கள் குறித்து ஆலோசிப்பதற்கான கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியிடமிருந்து வந்த அழைப்பின்பேரில், பினாங்கு முதல்வர் சௌ கோன் இயோவ் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு பிப்ரவரி 23 அன்று நடைபெறும் என்றும், இதில் மாநில சட்டசபைகளை கலைப்பது மற்றும் மாநில தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான தேதிகளை முடிவு செய்வது (இது தேர்தல் ஆணையத்தால் தீர்மானிக்கப்படும் ) போன்ற விஷயங்கள் பற்றி கலந்தாலோசிக்க உள்ளதாக ” பினாங்கு முதல்வர் கூறினார்.

இந்த சந்திப்பு தொடர்பில் சிலாங்கூர் மந்திரி பெசார் ஏனைய மாநிலங்களான நெகிரி செம்பிலான், கெடா, கிளாந்தான், மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாகவும், ஆனால் அந்தந்த மாநில அரசுத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும் சௌ கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here