சரவாக்கில் மூடுபனி-ஸ்ரீ அமான், கூச்சிங், செரியான் ஆகிய இடங்களில் காற்று தூய்மைக்கேடு

கூச்சிங்

ரவாக்கின் சில பகுதிகளான ஸ்ரீ அமான், கூச்சிங், செரியான் ஆகிய இடங்களில் ஆரோக்கியமற்ற காற்று தரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காலை 9 மணிக்கு, ஸ்ரீ அமான் அதிக அளவிலான காற்று மாசுபாட்டை (154) பதிவு செய்துள்ளது, இதைத் தொடர்ந்து கூச்சிங் 133 ஆகவும், செரியன் 128 ஆகவும்பதிவிடப்பட்டன.

சரவாக்கின் பிற பகுதிகளில் மிதமான API அளவீடுகள் பதிவு செய்யப்பட்டன. API காற்று தரம் மதிப்பீடு படி 0-50 நல்லது, 51-100 மிதமானது மற்றும் 101-200 ஆரோக்கியமற்றது என வகுக்கப்பட்டுள்ளது.

Asean Specialised Meteorological Centre படி, செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெற்கு மற்றும் தென்கிழக்கு காளிமந்தனில் மிதமான மற்றும் அடர்த்தியான புகை மூட்டம் வடமேற்கு நோக்கி நகர்கின்றன.

மேற்கு கலிமந்தனின் சில பகுதிகளிலும் சிறிது முதல் மிதமான புகை மூட்டம் காணப்பட்டது, வடக்கு நோக்கி மேற்கு சரவாக்கிற்கு நகர்கிறது. இதன் விளைவால் தான் சரவாக் நாட்டின் சில இடங்களில் புகைமூட்டமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here