2023 வரவுசெலவுத் திட்டத்தில் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த அதிக ஒதுக்கீடு எதிர்பார்ப்பு -அந்தோனி லோக்

இந்த வெள்ளிக்கிழமை மீண்டும் தாக்கல் செய்யப்படும் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொதுப் போக்குவரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், அதிக நிதி ஒதுக்கீட்டை போக்குவரத்து அமைச்சகம் எதிர்பார்ப்பதாக, அதன் அமைச்சர், அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பொதுப் போக்குவரத்தை நம்பியிருப்பவர்களின் வசதியை உறுதிசெய்யும் வகையில், ஒதுக்கீட்டை தமது அமைச்சு சிறப்பாக நிர்வகிக்கும் என்று கூறினார்.

“கோத்தா கினாபாலு, சபா மற்றும் கூச்சிங், சரவாக் ஆகிய இடங்களிலும் பேருந்து சேவைகளை வழங்க நாங்கள் நம்புகிறோம், எனவே கூடுதல் ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி சபா மற்றும் சரவாக்கில் சிறந்த மற்றும் திறமையான பேருந்து போக்குவரத்து திட்டத்தை தொடங்க ஒதுக்கீட்டை பயன்படுத்தலாம்,” என்று, தேசிய போக்குவரத்து மாற்றம் என்ற தலைப்பில் RTM வானொலியில் வழங்கிய ஒரு பேட்டியில் கூறினார்.

“போக்குவரத்து விஷயத்தில், அரசியல் வேறுபாடுகளைப் பார்க்கக் கூடாது. இது மக்களின் வாழ்க்கைத் தரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், மக்களுக்கு நல்ல சேவைகளை வழங்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். முக்கியமானது என்னவென்றால், பொதுப் போக்குவரத்தை நாம் பல வசதியை வழங்கி, மேம்படுத்த விரும்புகிறோம், , ”என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here