வாகனம் மரத்தில் மோதியதில் முதியவர் பலி

லாபுவானிலுள்ள ஜாலான் துன் முஸ்தபா என்ற இடத்தில், இன்று அதிகாலை SUV ரக வாகனம் மரத்தில் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

நள்ளிரவு 1 மணியளவில் தலையில் பலத்த காயம் அடைந்த சான் வா ஷின், 62, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக, லாபுவான் காவல்துறைத் தலைவர், அஹ்மட் ஜாவில்லா கூறினார்.

குறித்த சம்பவம் தொடர்பில், அதிகாலை 1.21 மணிக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து, 13 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், அங்கு விபத்தில் பாதிக்கப்பட்டவர் தனியாக ஓட்டிச் சென்ற தோயோத்தா ரஷ் வகை வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மரத்தில் மோதியதில், விபத்து நடந்ததாக கண்டறியப்பட்டதாகவும் லாபுவான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர், இஸ்மைடி இஸ்மாயில் தெரிவித்தார்.

“மேலும், வாகனத்திற்குள் சிக்கியிருந்த முதியவரை தீயணைப்பு வீரர்கள் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி வெளியே மீட்டனர், ஆனாலும் பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக துணை மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here