பப்புவா நியூ கினியாவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு

பப்புவா நியூ கினியாவில் நியூ பிரிட்டன் தீவுக்கூட்டம் உள்ளது. கிம்பே, பிஎன்ஜிக்கு தென்மேற்கே 77 கிமீ தொலைவில், 61 கிலோமீட்டர் ஆழத்தில், இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி உள்ளது என மலேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆனால் இதன் காரணமாக மலேசியாவில் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அது அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here