மார்ச் இறுதிக்குள் மாநிலத் தேர்தலுக்கான இடப் பங்கீடு குறித்து ஒற்றுமை அரசாங்கத்தின் உறுப்புக் கட்சிகள் முடிவு செய்யும் : ஃபாஹ்மி

இந்த ஆண்டு நாட்டின் ஆறு மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தல்களை எதிர்கொள்வதற்காக, ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள உறுப்புக் கட்சிகளுக்கு இடையேயான ஐடா ஓதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையின் முடிவு, வரும் மார்ச் மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்று, தான் எதிர்பார்ப்பதாக பக்காத்தான் ஹராப்பான் (PH) கட்சியின் தகவல் தொடர்பு தலைவர், ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

சிலாங்கூர், கெடா, பினாங்கு, கிளாந்தான், திரெங்கானு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கான ஆசனப் பங்கீடு குறித்த அதிகாரபூர்வமற்ற பேச்சுக்கள் சில காலமாக நடைபெற்று வருவதாகவும், இருப்பினும் எங்களது செயல்முறை முறையாக செயற்பட்டுவருகிறது, சில வாரங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட மலேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் செயலகத்தின் மூலம், இது மார்ச்சுக்குள் அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யப்படும் என்று நான் நினைக்கிறேன்.

“இந்நிலையில், சில மாநிலங்கள் முன்னதாகவே இடப் பங்கீடுகளை அறிவிக்கலாம் என்பதால், ஒரே நேரத்தில் இந்த அறிவிப்பு இருக்காது” என்று தான் நினைப்பதாகவும், இன்று சிலாங்கூர் பிகேஆர் தகவல் மாநாட்டைத் திறந்து வைத்த பின், செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here