ரமலான் மாதத்திற்கு போதுமான கோழி, முட்டை இருக்கிறது: மாட் சாபு

ஜார்ஜ் டவுன்: வரும் ரமலான்மா தத்தை முன்னிட்டு, அதிக தேவையை பூர்த்தி செய்ய, நாட்டில் கோழி மற்றும் முட்டை சப்ளை போதுமானது என  வேளாண் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு  கோழிப்பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், வெளிநாட்டு தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்டவை குறித்து அவர்களுடன் கலந்துரையாடியதாக கூறினார்.

முட்டை மற்றும் கோழி சப்ளை போதுமானது, நாங்கள் ஏற்கனவே முட்டை மற்றும் கோழிப்பண்ணையாளர்களுடன் ஆலோசித்தோம். ஆட்கள் பற்றாக்குறையால் பற்றாக்குறை ஏற்பட்டது. அது சரி செய்யப்படுகிறது.

அரசாங்கம், குடிவரவுத் துறை, காவல்துறை மற்றும் மனிதவள அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன், ஆபரேட்டர்கள் அதிக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் வகையில் இந்த செயல்முறையை எளிதாக்கும் என்று அவர் சனிக்கிழமை இங்கு வேளாண் சுற்றுலா மற்றும் அக்ரோயூத் சுற்றுப்பயண நிகழ்ச்சியை  தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களை பணியமர்த்துவதில் தளர்வு என்பது அனுமதியின்றி வெளிநாட்டு ஊழியர்களை சட்டப்பூர்வமாக்குவதற்கு வசதியாக மட்டுமே உள்ளது என்றார். வெளிநாட்டு தொழிலாளர்களின் பற்றாக்குறை தவிர, சோயா மற்றும் சோளம் போன்ற தீவன விலைகள் அதிகரித்து விநியோகத்தை பாதித்தன.

சோளம் மற்றும் சோயா இன்னும் இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது, ​​மலேசியாவில் விளையும் சோளம் கோழித் தீவனத்திற்கு ஏற்றது அல்ல, இருப்பினும், நாங்கள் ஏற்கனவே பெர்லிஸில் அதை வளர்க்கத் தொடங்கியிருக்கிறோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here