நாட்டின் நான்கு மாநிலங்களுக்கு நாளை வரை தொடர் கனமழை எச்சரிக்கை – மலேசிய வானிலை ஆய்வு மையம்

பகாங், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் நாளை வரை தொடர் மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பகாங்கில் உள்ள மாவட்டங்களான பெரா, பெக்கான் மற்றும் ரொம்பின், ஜெரான்டுட், பெந்தோங், டெமெர்லோ, மாரான் மற்றும் குவாந்தன் ஆகிய இடங்களில் கடுமையான அளவிலான தொடர்ச்சியான கனமழை நாளை வரைபெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.

அதேநேரம் திரெங்கானு, சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகிய பகுதிகளும், மாஞ்சாங், கிந்தா, பேராக் தெங்கா, கம்பார், பாகன் டத்தூக், ஹிலீர் பேராக், பத்தாங் பாடாங் மற்றும் முஅல்லிம் உள்ளிட்ட பேராக்கின் பல பகுதிகளுக்கும் தொடர் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, பகாங்க்கின் கேமரன் ஹைலேண்ட்ஸ், லிப்பிஸ் மற்றும் ரவூப் உள்ளிட்ட பகுதிகள், மற்றும் சரவாக்கின் கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமான், பேத்தோங், சாரிகேய், சிபு, முகா மற்றும் பிந்துலு ஆகியவற்றை உள்ளடக்கிய இடங்களிலும் இதேபோன்ற வானிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here