இன்று காலை 8 மணி நிலவரப்படி, ஜோகூரின் நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படடவர்களின் எண்ணிக்கை 560 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,591 பேராக உள்ளது.
தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்கு அங்கு 21 தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக, ஜோகூர் மாநில அரசின் செயலாளர், டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி கூறினார்.
கடந்த 24 மணி நேரமாக பெய்த தொடர் கனமழையின் விளைவாக ஜோகூரின் தாழ்வான பகுதிகளிலும் ஆற்றுக்கு அருகிலும் உள்ள பெரும்பாலான குடியிருப்புகளும் வெள்ளத்தால் நிரம்பி வழிகின்றன.
“மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நாளை வரை ஆபத்தான அல்லது சிவப்பு எச்சரிக்கை மட்டத்தில் தொடர் மழை பெய்யும் என்றும், இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகரிக்கும் என்றும் இன்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.










