எல்ஆர்டி நிலையத்தில் மின்னல் தாக்கியதால் தொழில்நுட்பக் கோளாறு

கிரிஞ்சி நிலையத்தில் மின்னல் தாக்கியதாக சந்தேகிக்கப்படுவதன் காரணமாக பயணிகள் ஊடுருவல் அவசர அமைப்பு (PIES) திடீரென செயல்படுத்தப்பட்டதை அடுத்து, விரைவு இரயிலின் Kelana Jaya LRT பாதை இன்று மதியம் தடைபட்டது.

மாலை 5.46 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் தொழில்நுட்பக் கோளாறால் இரு திசைகளில் இருந்தும் ரயில்கள் பாதிக்கப்பட்ட பகுதிகள் வழியாகச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக  தெரிவித்துள்ளது.   மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக  தொழில்நுட்பக் குழு இப்போது தளத்தில் உள்ளது. இடையூறு காரணமாக, அந்தப் பகுதி வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் கைமுறையாக இயக்கப்படும்.

இதனால்  பயண அட்டவணையில் தாமதம் மற்றும் பல  ரயில்  நிலையங்களில் நடைமேடையில் கூட்டத்தை ஏற்படுத்தியது.  பங்சார் எல்ஆர்டி நிலையத்திலிருந்து பாசார் செனி வரையிலும், கேஎல்சிசி நிலையத்திலிருந்து பாசார் செனி வரையிலும் பயணிகளுக்கு இலவச  பேருந்துகள் வழங்கப்படும். சிரமத்திற்கு வருந்துகிறோம் என தெரிவித்தனர்

கூட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு தளங்களில் செயல்பாட்டு பணியாளர்கள் மற்றும் துணை போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள்.  மேலும் அறிவிப்புகள்  விரைவு ரயிலின் சமூக வலைதளங்கள், மற்றும்   ரயில்  நிலையங்களில் வெளியிடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here