குளுவாங்கிலுள்ள தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஜோகூரின் பட்டத்து இளவரசர் துங்கு மஹ்கோடா (TMJ) துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் நேற்று சந்தித்தார்.
தனது மகன் ராஜா முடா ஜோகூர் துங்கு இஸ்கந்தர் துங்கு இஸ்மாயிலுடன் அங்கு வருகை தந்த அவர், SK பத்து 3 மற்றும் டேவான் சியாரிஃபா அசிசாவில் இயங்கிவந்த தற்காலிக வெள்ள நிவாரண மையத்தை பார்வையிட்டார்.
ஜோகூர் பட்டத்து இளவரசரின் இந்த வருகை தொடர்பான புகைப்படங்கள் அவரது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
நேற்று முதல் பெய்து வரும் கனமழையால் மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.