கெடா மந்திரி பெசாரின் உதவியாளர் கைது

கெடா மாநிலத்தில் அரிதான கனிய வளங்களை (REE) வெட்டி எடுப்பது தொடர்பாக, RM1 மில்லியன் கோரியதற்காக கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹமட் சனுசி முஹமட் நோரின் உதவியாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

50 வயதுடைய நபர் ஒருவரிடம் சந்தேகநபர் பணத்தை கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் அந்த அதிகாரி எந்த நிறுவனத்திடம் பணம் கேட்டுள்ளார் என்பது தெரியவில்லை.

சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் அலோர் ஸ்டாரில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

மேலும், அலோர் ஸ்டார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபரை, ஜூலை 26 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைக்குமாறு நீதிபதி முஹமட் சுல் ஹில்மி லத்தீஃப் ஆணை பிறப்பித்தார்.

கைது செய்யப்பட்ட கெடா மந்திரி பெசாரின் உதவியாளர் இந்த வழக்கில் நான்காவது சந்தேக நபர் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் மூத்த புலனாய்வு இயக்குநர், டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹாஷிம் அவர் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here