டான்ஸ்ரீ இட்ருஸ் மீண்டும் சட்டத்துறை தலைவராக நியமனம்

டான்ஸ்ரீ இட்ருஸ் ஹருன் சட்டத்துறை தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் சுகி அலி தெரிவித்தார்.

இந்த நியமனம் வரும் திங்கள்கிழமை (மார்ச் 6) முதல் ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்றும், மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா அவர்களின் அனுமதியுடன், கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு (1) பிரிவு 145 இன் கீழ் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின் மூலம் முகமட் சுகி அலி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here