சோதனை மேல் சோதனை; பத்து பகாட்டில் உள்ள நிவாரண மையம் வெள்ளத்தில் மூழ்கியது

பத்து பகாட்டின் ஸ்ரீ மேடான், கம்போங் பாரிட் வாரிஜோ அருகே SK ஸ்ரீ செஜாட்டியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண மையம் வெள்ளத்தில் மூழ்கியதால், அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்டவர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த நிவாரண மையத்தில் பாதிக்கப்பட்ட அனைவரையும் வெளியேற்றுவது, மற்றும் இன்னும் வீடுகளில் சிக்கித் தவிக்கும் சில குடியிருப்பாளர்களை வெளியேற்றுவது போன்ற நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளால் கட்டம் கட்டமாக செய்யப்படுவதாக, பத்து பகாட் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் இஸ்மாயில் டோல்லா கூறினார்.

“இன்று அதிகாலையில் இருந்து குறித்த நிவாரண மையம் அமைந்துள்ள பகுதியில் ஒரு மீட்டர் வரை வெள்ளம் உயர்ந்ததாகவும், அங்குள்ள கிராமப் பகுதியில் 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் தங்கள் வீடுகளில் சிக்கியிருப்பதாககவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக” அவர் மேலும் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்ற பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 241 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இஸ்மாயில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here