வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று மாநிலங்களில் நிலச்சரிவு, சாலை இடிபாடு உள்ளிட்ட 130 பேரிடர் சம்பவங்கள் பதிவு

ஜோகூர், பகாங் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி நிலவரப்படி, மொத்தம் 130 பேரிடர் சம்பவங்களை பொதுப்பணித்துறை கண்டறிந்துள்ளதாக, அது இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவற்றில் 98 சம்பவங்கள் வெள்ளம் தொடர்பானவை, 21 நிலச்சரிவுகள், 6 சாலை இடிபாடுகள், 4 மூழ்கும் துளைகள் மற்றும் ஓரு பாலம் இடிந்து சேதம் ஆகியன சம்பந்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும், இவற்றில் 90 சம்பவங்கள் ஜோகூரிலும், பகாங்கில் 29 சம்பவங்களும், நெகிரி செம்பிலானில் 7 சம்பவங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் அது குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், சரவாக்கின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் நாளை வரை தொடர் மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here