பகாங் RM50,000 மதிப்புள்ள மற்றொரு தொகுதி வெள்ள உதவிகளை ஜோகூருக்கு வழங்கியது

வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட ஜோகூர் மாநில குடியிருப்பாளர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், பகாங் RM50,000 மதிப்புள்ள மற்றொரு தொகுதி வெள்ள உதவியை ஜோகூருக்கு அனுப்பியுள்ளதாக பகாங் மாநில மந்திரி பெசார், டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

வெள்ளச் சூழ்நிலைகளைக் கையாள்வதில் அனுபவம் உள்ள மாநிலமாக பகாங் இருப்பதால், ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை பகாங் அரசாங்கம் உண்மையிலேயே புரிந்துகொண்டுள்ளதாகவும், அவர்களில் அக்கறை கொண்டு தாம் இந்த உதவியை அனுப்பியதாகவும் அவர் கூறினார்.

பகாங்கின் வெள்ள உதவியில் 100 மெத்தைகள், 200 பாய்கள், 250 பேக் டயப்பர்கள், 500 சுகாதார கருவிகள் மற்றும் 750 புத்துணர்ச்சி கருவிகள் ஆகியவை ஜோகூர் மாநிலத்திற்கு அனுப்பப்படும் தொகுதியில் அடங்குவதாக அவர் மேலும் கூறினார்.

கடந்த வெள்ளியன்று, ஏற்கனவே பகாங் மாநிலம் ஜோகூருக்கு சுமார் RM80,000 மதிப்பிலான வெள்ள உதவியை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here