பெரும் தியாகங்களைச் செய்த ஒரு தலைவரான முஹிடினுக்கு எதிரான குற்றச்சாட்டு மலேசியாவிற்கு சோகமான தருணம் என்கிறார் பேஜா

முன்னாள் பிரதமரும் பெர்சாத்து கட்சி தலைவருமாகிய டான்ஸ்ரீ முஹிடின் யாசினுக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 10) கோலாலம்பூர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது, இது நாட்டிற்கு ஒரு சோகமான தருணம் என்று டத்தோஸ்ரீ அகமட் பைசல் அசுமு தெரிவித்தார்.

பெரும் தியாகங்களைச் செய்த ஒரு தலைவர், சிலரின் பகுத்தறிவற்ற காரணங்களுக்காக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதே இதற்குக் காரணம் என்று, பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவருமான அவர் கூறினார்.

இன்று கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் பெர்சாத்து ஆதரவாளர்கள் குழுவுடன் தமது கட்சியின் தலைவரும் பெரிகாதான் நேஷனல் தலைவருமான முஹிடினுக்கு ஆதரவை தெரிவிக்க வந்த அகமட் பைசல், “மக்கள் மற்றும் கடவுளுக்காக நீதிமன்ற அதிகாரிகளும் வழக்கறிஞர்களும் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். “ஒரு அரசியல்வாதியையே இப்படி நடத்தினால், மக்களின் கதி என்னவாகும்?” என்று அவர் கேட்டார்.

மேலும் நீதியும் உண்மையும் வெல்லும் என்று தான் நம்புவதாகவும் அகமட் பைசல் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here