ஆற்றின் நீர் மட்டம் காரணமாக நீர் பம்புகளை நிறுவுவதில் சவால் – ஜோகூர் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை

ஜோகூர் மாநிலத்திலுள்ள பெரும்பாலான ஆறுகளில் நீர் மட்டம் எச்சரிக்கை அளவைவிட அதிகமாக உள்ளன. இதன் காரணமாக நீர் பம்புகளை நிறுவுவது சவாலாக உள்ளதாக ஜோகூர் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை தெரிவித்துள்ளது.

ஆறுகளிலுள்ள மேலதிக நீரை வெளியேற்ற தற்காலிக பம்ப்களை நிறுவும்போது, மொபைல் பம்ப் பொருத்தும் இடமானது ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடாத இடமாக இருக்க வேண்டும் என்பதை முதலில் உறுதிபடுத்த வேண்டும் என்று, ஜோகூர் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையின் இயக்குனர், அஸ்ரன் கலீல் கூறினார்.

இன்று காலை நிலவரப்படி, பத்து பகாட் மாவட்டத்தில் உள்ள 14 நீர்நிலையங்களில் நான்கு நீர் நிலையங்கள், பெக்கோக் அணை, ஸ்ரீ மேடானில் உள்ள சுங்கை சிம்பாங் கிரி மற்றும் பாரிட் சுலோங் மற்றும் சுங்கை செங்கராங் ஆகிய நான்கு நீர்நிலையங்கள் இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதாக அவர் கூறினார்.

பத்து பகாட்டில் உள்ள நீர்நிலைகளில் மொத்தம் 15 பம்புகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த பம்ப்கள் மூலம் வெளியேற்றப்படும் நீர் ஆற்றிலோ அல்லது கடலிலோ விடப்படுகின்றன என்று அவர் கூறினார்.

மேலும் ஜோகூரில் வெள்ள நீர் நிலைமையை சீர்செய்யும் பொருட்டு மெர்சிங், ஜோகூர் பாரு, தங்காக், மூவார், பொந்தியான் மற்றும் கோத்தா திங்கி ஆகிய மாவட்டங்களிலும் 31 நடமாடும் பம்புகள் நிறுவப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here