வெள்ளம்: நான்கு மாநிலங்களில் 43,000 க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

இன்று காலை நிலவரப்படி, நான்கு மாநிலங்களில் உள்ள 155 தற்காலிக நிவாரண மையங்களில் 12,049 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 43,136 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜோகூரில், நேற்று இரவு 8 மணி நிலவரப்படி வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,770 ஆகக் குறைந்து, காலை 8 மணி நிலவரப்படி 42,638 ஆகக் குறைந்துள்ளது என்று, மாநில பேரிடர் மேலாண்மை குழு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜோகூரில் பத்து பகாட் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 39,870 பேர் அங்குள்ள நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர். அதைத் தொடர்ந்து மூவாரில் 1,457 பேரும், தாங்காக்கில் 949 பேரும், மற்றும் சிகாமாட்டில் 362 பேரும் தங்கியுள்ளனர் என்று, அது மேலும் தெரிவித்துள்ளது.

மலாக்காவில் நேற்றிரவு 8 மணி நிலவரப்படி, 61 குடும்பங்களைச் சேர்ந்த 259 பேர் தங்கியிருந்தனர், ஆனால் இன்று காலை 55 குடும்பங்களைச் சேர்ந்த 238 பேராகக் குறைந்துள்ளது என்று, மாநில பேரிடர் மேலாண்மை செயலகம் தெரிவித்துள்ளது.

பகாங்கில், சமூக நலத் துறையின் InfoBencana போர்ட்டலின் தரவுகளின் அடிப்படையில், ரொம்பின் மாவட்டத்தில் இயங்கிவரும் இரண்டு நிவாரண மையங்களில் மொத்தம் 169 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, சரவாக்கின், கூச்சிங்கில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 91 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள இரண்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here