ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் முஹிடின் மீது நாளை குற்றஞ்சாட்டப்படும்

 ஷா ஆலம்: பெர்சாத்து கட்சிக் கணக்கில் உள்ள நிதி தொடர்பாக முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின்  மீது நாளை செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். e-judiciary சோதனையின் அடிப்படையில், இந்த வழக்கு செஷன்ஸ் கோர்ட் 1இல் நீதிபதி ரோசிலா சலே முன்பு காலை 9 மணிக்கு விசாரணைக்கு வரும்.

பாகோ நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவருமான  முஹிடின், பணமோசடி எதிர்ப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருவாய் சட்டம் 2001 (AMLATFPUAA) இன் கீழ் ஒரு குற்றச்சாட்டை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 10 அன்று, 75 வயதான முகைதீன், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் RM232.5 மில்லியன் அளவு ஊழல் செய்ததாக நான்கு குற்றச்சாட்டுகள் மற்றும் RM195 மில்லியனை உள்ளடக்கிய இரண்டு பணமோசடி குற்றச்சாட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here