கெடா சுல்தானுடன் பிரதமர் சந்திப்பு

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்றிரவு இஸ்தானா அனாக் புக்கிட்டில் கெடா சுல்தான் அல்-அமினுல் கரீம் சுல்தான் சல்லேஹுதீன் சுல்தான் பத்லிஷாவை சந்தித்தார்.

இரவு 8 மணியளவில் சுல்தான் அப்துல் ஹலிம் விமான நிலையத்திற்கு வருகைதந்த பிரதமர் மற்றும் அவரது குழுவினரை மாநில காவல்துறைத் தலைவர், டத்தோ வான் ஹசன் வான் அஹ்மட் வரவேற்றார் என்று, கெடா காவல்துறையின் முகநூல் பக்கத்தில் வெளியான ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இஸ்தானா அனாக் புக்கிட்டில் நடந்த இந்த சந்திப்பிற்குப் பிறகு, கோலாலம்பூருக்குப் புறப்படுவதற்கு முன், சுல்தான் அப்துல் ஹமீதின் சமாதியைப் பார்வையிட பிரதமர் உள்ளிட்ட குழுவினர் சென்றனர்.

மேலும் கெடா முஃப்தி டத்தோ ஷேக் ஃபட்சில் அவாங், மாநில சட்டமன்ற உறுப்பினர் சுகா மெனந்தி டத்தோ ஜம்ரி யூசுப் மற்றும் துணை மாநில காவல்துறைத் தலைவர், டத்தோ முகமட் ரோஸ் ஷாரி ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர் என அப்பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here