சிங்கப்பூர் அதிபர் அடுத்த வாரம் மலேசியாவிற்கு வருகை

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், வரும் மார்ச் 20 முதல் 22 வரை மலேசியாவுக்கு தனது முதல் அதிகாரப்பூர்வ அரசு முறை பயணத்தை மேற்கொள்கிறார்.

மாட்சிமை தங்கிய அல்-சுல்தான் ரியாயதுதின் அல்-முஸ்தபா பில்லா ஷாவின் அழைப்பின் பேரில், அவரின் இந்த விஜயம் உள்ளது என்றும், இந்த விஜயத்தின் போது சிங்கப்பூர் அதிபரின் கணவர் முஹமட் அப்துல்லா அல்ஹப்ஷியும் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

சிங்கப்பூர் அதிபரை மாட்சிமை தங்கிய மாமன்னர் மற்றும் பேரரசியார் துங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் வரவேற்பார்கள் என்றும், அதனைத் தொடர்ந்து அங்கு நடைபெறும் மரம் நாட்டு விழாவில் கலந்துகொள்வார்கள் என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஹலிமாவும் அவரது கணவரும் ஆர்க்கிட் மலர்களுக்கு பெயரிடும் விழாவில் கலந்து கொள்ளுவார்கள் என்றும், அங்கு அவர்களின் நினைவாக ஒரு புதிய ஆர்க்கிட் கலப்பினமான Vanda Halimah Yacob Mohamed பெயரிடப்படும் என்றும் அது மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here