சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 9 வயது சிறுமி பலி

கிள்ளான்: மோட்டார் சைக்கிள் மீது லோரி மோதிய விபத்தில் ஒன்பது வயது சிறுமி உயிரிழந்தார். சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் மோர்னி மாமத் கூறுகையில், புதன்கிழமை (மார்ச் 22) கம்போங் தெலோக் காங்கில் உள்ள ஜாலான் தெங்காவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

இதில் மூன்று பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார் என்று அவர் கூறினார். மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற 54 வயதுடைய பெண், தனது அயலவரின் இரண்டு பிள்ளைகளையும் பாடசாலையிலிருந்து அழைத்து சென்றது தெரியவருகிறது. அவரும் ஏழு வயது சிறுவனும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here