ஜோகூரிலுள்ள கடை ஒன்றில் ஆடவர் ஒருவர் சுட்டுக் கொலை

ஜோகூரின் தாமான் மெலாடீஸில் உள்ள ஒரு பல சரக்குக் கடையில், கடந்த திங்கட்கிழமை (மார்ச் 20) 30 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் தொடர்புடைய சந்தேக நபரை போலீசார் இன்னும் தேடி வருவதாகவும், இந்தக் கொலைக்கு ஏதேனும் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் பலமுனைகளில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாக, ஜோகூர் காவல்துறை தலைவர், ஆணையர் டத்தோ கமாருல் ஜமான் மாமட் கூறினார்.

“நான் இன்னும் பிரேத பரிசோதனை முடிவுகளைப் பார்க்கவில்லை, ஆனால் இது நிச்சயமாக காவல்துறையினருக்கு அதிர்ச்சியூட்டும் ஒரு வழக்கு” என்று, இன்று வியாழக்கிழமை ஜோகூர் காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

குறித்த சம்பவத்திற்கு முன்னர் ஒரு இறுதிச் சடங்கின் போது சுமார் 20 பேர் கலவரத்தில் ஈடுபட்டதாகவும் நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here