இந்த ஆண்டு ரமலான் நோன்பு பெருநாள் மற்றும் தொழிலாளர் தினத்துடன் இணைந்து, நான்கு கூடுதல் மின்சார ரயில்களை (ETS) சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும், அதற்கான கூடுதல் ரயில் டிக்கெட்டுகள் இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 24) காலை 10 மணி முதல் விற்பனை செய்யப்படும் என்றும் KTMB நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூடுதல் ரயில் சேவைகள் KL சென்ட்ரல்-பாடாங் பெசார்-KL சென்ட்ரல் மற்றும் KL சென்ட்ரல்-பட்டர்வொர்த்-KL சென்ட்ரல் ஆகிய இரண்டு வழித்தடங்களை உள்ளடக்கியது என்று, அது நேற்று வியாழன் (மார்ச் 23) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கூடுதல் சேவைகள் ஒரு நாளைக்கு 1,260 ரயில் டிக்கெட்டுகளை வழங்குகின்றன, இந்த காலகட்டத்தில் வணிக வகுப்பு உட்பட மொத்த டிக்கெட்டுகளின் எண்ணிக்கை 13,860 ஆக அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு வழித்தடங்களுக்கான கூடுதல் மின்சார ரயில் சேவைகள் ஏப்ரல் 19 முதல் 25 வரை 14 சேவைகளை உள்ளடக்கியதாக இருக்கும், ஒவ்வொன்றும் 4,410 டிக்கெட்டுகளை வழங்குகின்றன.
“இதற்கிடையில், தொழிலாளர் தினத்திற்கான கூடுதல் ரயில் சேவைகள் 16 சேவைகளை உள்ளடக்கியது, ஏப்ரல் 28 முதல் மே 1 வரை, மொத்தம் 5,040 டிக்கெட்டுகளை அந்த சேவை கொண்டுள்ளது,” என்று KTMB தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு KTMB அழைப்பு மையம் 03-2267 1200 அல்லது KTMB இன் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களை அணுகலாம்.








