அஜித்தின் தந்தை சுப்ரமணியன் காலமானார்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார், அடுத்ததாக தன்னுடைய 62-ஆவது படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இன்னும் சில தினங்களில் அஜித்தின் அடுத்த பட அறிவிப்புக்காக காத்திருந்த ரசிகர்களை,  அஜித் தந்தை மரணம் குறித்து வெளியான தகவல் அதிர்ச்சியடைய செய்தது. அஜித்தின் அப்பா சுப்ரமணியன்  தூங்கிக் கொண்டிருந்த போதே உயிரிழந்தார்.

ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு, உடல்நல குறைவு ஏற்பட்டபோது, பக்கவாத பிரச்சினையால் பாதிக்கப்பட்டார். படுத்த படுக்கையாக இருந்த தந்தையை அஜித், தன்னுடைய வீட்டிலேயே அவருக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வைத்து, கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார். 85 வயதாகும் சுப்ரமணியன் உயிரிழந்த தகவல், வெளியான பின்னர் அஜித் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்றும் வெளியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here