வர்ணப் பவுடர் பதப்படுத்தும் தொழிற்சாலையில் தீ..!

பெட்டாலிங் ஜெயா, ஜாலான் 13/3, பிரிவு 13 இல் உள்ள வர்ணப் பவுடர் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக அது கிட்டத்தட்ட தீயில் எரிந்து நாசமானது.

குறித்த சம்பவம் தொடர்பில், அதிகாலை 4.42 மணியளவில் தீயணைப்பு செயல்பாட்டு மையத்திற்கு அவசர அழைப்பு வந்தது என்று, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் மாநில இயக்குநர் மோர்னி மாமட் கூறினார்.

“வர்ணப் பவுடர் பதப்படுத்தும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்ட கட்டடம், A தரத்திலான கட்டடமாக இருந்தது, அது 40 விழுக்காடு தீயில் எரிந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

“காலை 8.11 மணியளவில் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது, இச் சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை” என்று, அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“தீ விபத்து நடந்த இடத்தில் இரசாயனங்கள் அல்லது பிற ஆபத்தான பொருட்கள் எதுவும் கசிந்திருக்கவில்லை என்றும், தீ ஏற்பட்டதற்கான காரணம் விசாரணையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here