கத்தாருக்குள் இஸ்ரேல் தாக்குதல்: உலக நாடுகள் கண்டனம்!

களம்பூர்:

கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் (Doha), ஹமாஸ் (Hamas) இயக்கத்தின் முக்கிய அமைதிப் பேச்சுவார்த்தையாளரையும், உயர்மட்ட தலைவர்களையும் (ceasefire negotiator) இலக்காகக் கொண்டு, இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலில், ஆறு பேர் உயிரிழந்தனர். ஹமாஸ் இயக்கத்தின், உயர்மட்டத் தலைவர்கள், இந்தக் குண்டுவீச்சில், தப்பித்துள்ளனர்.

ஆனால், அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடான, கத்தாரின் மண்ணில், நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், உலக நாடுகளின் கண்டனத்தைப் பெற்றுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து, முன்னதாகவே, தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது என்று, வெள்ளை மாளிகை (White House) உறுதிப்படுத்தியது. மேலும், இது, அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளின் நோக்கங்களை சிதைப்பதாக கூறி, இத்தாக்குதலை, அமெரிக்கா விமர்சித்துள்ளது.

டொனால்ட் டிரம்ப் (Donald Trump), இந்தத் தாக்குதலுக்கு, தான், அதிகாரம் அளிக்கவில்லை என்றும், கத்தாருக்கு, தனதுக் குழுவின் எச்சரிக்கை, மிக தாமதமாக வந்ததாகவும், கூறினார்.

இதனிடையே, இஸ்ரேலின் இந்தத் தாக்குதலை, கத்தார், “அரசுப் பயங்கரவாதம்” (state terrorism) என்று குற்றம் சாட்டியதுடன், இதற்குப் பதிலடி கொடுப்பதாகவும், உறுதியளித்துள்ளது.

அரபு லீக் (Arab League), துருக்கி, பிரிட்டன் தலைவர்களும், இந்தத் தாக்குதலை, ஒரு இறையாண்மை மீறல் (violation of sovereignty) என்று கூறி, கண்டனம் தெரிவித்தனர்.

ஜெருசலேமில் (Jerusalem), ஹமாஸ் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டிற்கு, ஒரு பழிவாங்கும் நடவடிக்கை இது என்று, இந்தத் தாக்குதலுக்கு, இஸ்ரேல், முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது.

இருப்பினும், இத்தாக்குதல், அமைதி முயற்சிகளையும், பிராந்திய இராஜதந்திரத்தையும், ஆபத்தில் ஆழ்த்துவதாக, விமர்சகர்கள் எச்சரித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here