உக்ரைன் போரின் விளைவால் ரஷியாவில் மருந்து தட்டுப்பாடா?- ரஷியா சுகாதார அமைச்சர் விளக்கம்

உக்ரைனில் ஓர் ஆண்டாக போர் நடத்தி வரும் ரஷியா மீது அமெரிக்கா மற்றும் பல்வேறு மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்த தடைகளில் இருந்து உயிர்காக்கும் மருந்துகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள போதும், போரினால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து, காப்பீடு மற்றும் சுங்கத் தடைகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளால் ரஷியாவுக்கு உயிர் காக்கும் மருந்துகளின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக ரஷியாவில் கடுமையான மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் அந்த நாடடின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ, இதுகுறித்து அவர் கூறுகையில், “ரஷியாவில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளின் உலகளாவிய பற்றாக்குறை இல்லை. ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால், எல்லாவற்றையும் விரைவாகவும் திறமையாகவும் ஈடுசெய்யும் வழிமுறைகளை நாங்கள் உருவாக்கி செயல்படுத்தியுள்ளோம். ரஷியாவில் புதிய ஆய்வகங்கள் மற்றும் உற்பத்தி வசதிகள் உருவாகி வருகின்றன மற்றும் சுகாதார அமைச்சகம் பல புதிய உற்பத்தி தளங்களை உருவாக்குகிறது” என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here