மலேசியாவில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் பல்கலைக்கழக மாணவர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்-உயர்கல்வி அமைச்சர்

ஜார்ஜ் டவுன் –

மக்களின் தன்னம்பிக்கையை உயர்த்தும் முயற்சியில் முக்கியப் பங்கு வகிக்குமாறு பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டின், வரலாற்றில் மாணவர்களின் நாட்டங்களும் சிறந்த சிந்தனைகளும் அவரவர் நாட்டிற்குப் பல வெற்றிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன என்றும் இவ்வாறான வரலாற்றுப் பதிவுகள் உலகம் முழுவதும் இருக்கின்றன என்றும் கூறிப்பிட்டார்.  

1970கள் மற்றும் 1980 களில் தென்னாப்பிரிக்காவில் நிறவெறி எதிர்ப்பு இயக்கம், கஜகஸ்தானில் நிலச் சீர்திருத்தங்களுக்கு எதிரான 2016 எதிர்ப்புகள், 1974 போர்ச்சுகலில் நடந்த கார்னேஷன் புரட்சி போன்ற மாணவர்களால் தூண்டப்பட்ட மற்றும் அணிதிரட்டப்பட்ட சில வரலாற்று சான்றுகளையும் அவர் மேற்கோள் காட்டினார்.

“ஒரு சமூகத்தால் நடத்தப்படும் மதிப்பு அமைப்பை வடிவமைப்பதில் மாணவர்களின் பங்குகளும் இயக்கங்களும் எவ்வாறு மிகவும் பயனுள்ளதாக உள்ளன என்பதைக் காட்ட இன்னும் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன,” என்று அவர் நேற்று UiTM SeMalaysia மாணவர் பிரதிநிதி கவுன்சில் (MPP) மாநாட்டின் தொடக்கத்தில் தனது உரையில் கூறினார்.

பல்கலைக்கழகத்திற்கு வெளியே நிகழும் நிகழ்வுகளைப் பற்றிய விழிப்புணர்வு நாட்டின் கொள்கைகளுக்கு மட்டுமில்லாமல் சிறந்த அரசாங்க நிர்வாகத்திற்கும் பங்களிக்கிறது என்றார்.

“உண்மையில், நமது நாட்டில், பல ஆரம்பகால சுதந்திர இயக்கங்கள் மாணவர்களால் இயக்கப்பட்டதுடன், சமூகம் மாணவர்களை தேசத்தின் புத்திசாலிகளாகவும் மாற்றத்தைக் கொண்டு வரும் தலைமுறையினராகவும் பார்க்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here