அலோர் ஸ்டாரின் பெண்டாங் அருகே உள்ள சுங்கை டியாங்கின், ஜாலான் ஃபெல்டாவில் இன்று, படிவம் ஐந்து மாணவர் ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் புரோத்தோன் சாகா கார் மீது மோதியதில், மாணவர் உயிரிழந்தார்.
இன்று காலை 7 மணியளவில், பாதிக்கப்பட்ட மாணவர் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது, ஆசிரியை ஓட்டிச் சென்ற கார், இடதுபுறம் உள்ள சந்திப்பில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது, இந்த விபத்து ஏற்பட்டது என்று, பெண்டாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அரிஸ் ஷாம் ஹமேசா கூறினார்.
பாதிக்கப்பட்ட முஹமட் ஹஸ்ருல் ஹக்கிமி இப்ராஹிம் என்பவர், செக்கோலா மெனெங்கா கேபாங்சான் (SMK) சுங்கை தியாங்கின் மாணவர் என்று அடையாளம் காணப்பட்டார்.
“பாதிக்கப்பட்டவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது என்றும், அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்றும் ” அவர் மேலும் கூறினார்.
மேலும் இவ்வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது’’ என்று அரிஸ் கூறினார்.
உயிரிழந்த முஹமட் ஹஸ்ருலின் தாய் கூறுகையில், தந்து மூத்த மகனான பாதிக்கப்பட்ட மாணவன் தனது சொந்த பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு, 10 மற்றும் 12 வயதுடைய தனது இரண்டு இளைய உடன்பிறப்புகளை செக்கோலா கேபாங்சான் (SK) சுங்கை தியாங்கிற்கு அனுப்பிட்டு வந்தான் என்றார்.










