ஜார்ஜ் டவுன்:
பினாங்கில் இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மொத்தம் 288 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் கடந்த ஆண்டு, மாநிலத்தில் மொத்தம் 450 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மாநில சமூக மேம்பாடு மற்றும் நலன்புரி குழுவின் தலைவர் லிம் சியூ கிம் கூறினார்.
ஜனவரி முதல் செப்டம்பர் வரை பதிவான 288 குடும்ப வன்முறை வழக்குகளில் 64 பேர் ஆண்கள், 224 பேர் பெண்கள் சம்மந்தப்பட்டுள்ளனர் என்றும், அதே நேரத்தில் கடந்த ஆண்டு 105 ஆண்களும், 345 பெண்களும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவற்றில் “ஆண்கள் சம்பந்தப்பட்ட குடும்ப வன்முறை வழக்குகளில் வாய்மொழி துஷ்பிரயோகம், சைபர்புல்லிங் போன்றவை அடங்கும்.
“குடும்ப வன்முறை என்பது வழக்கமாக நிகழும் சமூகப் பிரச்சினைகளில் ஒன்றாகும், மேலும் இது மற்ற தரப்பினரின் தலையீடு இல்லாமல் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாக கருதப்படுகிறது.
“இருப்பினும், இந்தப் பிரச்சினை வரம்பு மீறி போவதால் கைது செய்யப்படக்கூடிய ஒரு கிரிமினல் குற்றமாக மாறுகிறது ”என்று அவர் இன்று நடந்த மாநில சட்டமன்றக் கூட்டத்தில் கூறினார்.





















