“பாலேக் கம்போங்” சொந்த ஊர்களுக்கு செல்ல டிக்கெட்டுகளுக்காக அலைமோதும் மக்கள் கூட்டம்

நோன்பு பெருநாளை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்கு செல்வதில் மலேசியர்கள் ஆர்வம் காட்டுவது அனைவரும் அறிந்ததே. ஹரி ராயா விடுமுறைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், மக்கள் பேருந்து டிக்கெட்டுகளைப் பெறுவதில் அவசரத்தில் உள்ளனர்.

22 வயதான யுனிவர்சிட்டி செயின்ஸ் இஸ்லாம் மலேசியா மாணவி நூருல் அஸ்மா உல் ஹுஸ்னா கூறுகையில், கெடாவில் உள்ள தனது சொந்த ஊருக்குச் செல்லும் பேருந்து டிக்கெட்டுகளுக்காக தான் அணுகியபோது டிக்கட்டுக்கள் அவ்வளவு வேகமாக விற்றுத் தீர்ந்ததைக் கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாகக் கூறினார்.

“ஆரம்பத்தில், நான் ரயிலில் செல்ல நினைத்தேன், ஆனால் இருக்கைகள் ஏற்கனவே முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை  உணர்ந்தேன். பின்னர் “எனது பல்கலைக்கழகம் இருக்கும் நெகிரி செம்பிலானில் உள்ள பல்வேறு பேருந்து முனையங்களை நான் சோதித்தேன், ஆனால் என்னால் ஒரு டிக்கெட் கூட வாங்க முடியவில்லை” என்று அவர் கூறினார்.

“அதிர்ஷ்டவசமாக, எனது நண்பர்களின் உதவியுடன் Terminal Bersepadu Selatan’s (TBS) செயலி மூலம் ஆன்லைனில் டிக்கெட்டைக் பெறமுடிந்தது” என்று நூருல் அஸ்மா கூறினார்.

கட்டுமானத் தொழிலாளியான முகமட் அல் ஹக்கிம், 22 கூறுகையில், தனது வருங்கால மனைவி கிளாந்தானில் உள்ள தனது சொந்த ஊருக்குத் திரும்புவதற்கு பேருந்து டிக்கெட்டுக்காக ஏங்குகிறார் என்றார்.

“கடந்த வாரத்தில் நான் பல்வேறு பேருந்து முனையங்களிலும் இணையம் மூலமாகவும் டிக்கெட்டுகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் TBS இல் டிக்கட்டை பெற முடியும் என்று நான் நம்புகிறேன் என்றும், அவர் தனது மோட்டார் சைக்கிளில் கெடாவில் உள்ள தனது சொந்த ஊருக்குத் திரும்புவதே தனது தற்போதைய திட்டம் என்று கூறினார்.

பான் மலேசியா பேருந்து நடத்துனர் சங்கத்தின் தலைவர், டத்தோ அஷ்பர் அலி கூறுகையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு, சில பேருந்து நிறுவனங்கள் ராயாவுக்கு ஏறக்குறைய அல்லது முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டதாக என்னிடம் கூறியுள்ளன, தற்போது வடக்கு மற்றும் கிழக்குக் கடற்கரை மாநிலங்களுக்கான தேவை அதிகமாக உள்ளதாக அவர் கூறினார்.

“சில பேருந்து நிறுவனங்கள் குறித்த காலங்களில் அதிக பேருந்துகளை இயக்குவது குறித்து பரிசீலித்து வருகின்றனர், ஆனால் பேருந்து ஓட்டுநர்கள் பற்றாக்குறையால் இது தற்போது உத்தரவாதம் அளிக்கப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், ஏர் ஏசியா மலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ரியாட் அஸ்மட் கூறுகையில், ஏப்ரல் 19 மற்றும் 22 க்கு இடையில் குறைந்த கட்டணத்திலுள்ள 11,400 கூடுதல் இருக்கைகளில் 65 விழுக்காடு ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டன என்றார்.

-The Star

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here