செல்போனில் இந்த சிறிய துளை ஏன் தெரியுமா?

 இப்போதெல்லாம் கையில் போன் இல்லாதவர்களை பார்ப்பதே கஷ்டம்தான். குறிப்பாக ஸ்மார்ட்போன் பெரும்பாலானவர்களின் கைகளில் தவழ்கிறதுசில ஆயிரங்கள் முதல் பல லட்சங்கள் விலை வரையிலான செல்போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. விலைக்கு ஏற்ப அதன் சிறப்பம்சங்களும் இருக்கின்றன.

செல்போனில் இருக்கும் சிறப்பம்சங்களை நாம் அது தொடர்பான வீடியோக்களை பார்த்து தெரிந்துகொள்வோம். ஆனால் நம் செல்போனில் வெளிப்பகுதி குறித்து எந்த அளவுக்கு நமக்கு தெரியும்?

செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய ஓட்டை ஒன்றை கவனித்து இருக்கிறீர்களா? அது எதற்கு என்று தெரியுமா? சிலருக்கு தெரிந்திருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு அதற்கான விடை தெரியாது.

அந்த மிகச்சிறிய துளை நம் போனின் இரைச்சலை ரத்து செய்யும் மைக்ரோபோன் ஆகும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், நாம் செல்போனில் பேசும்போது செயல்படும் மைக்ரோஃபோன் அதுதான்.

நாம் யாரையாவது செல்போனில் அழைக்கும்போது, இந்த மைக்ரோஃபோன் இயக்கப்படும். அந்த சிறிய துளை சரியாக நம் குரலை பிக்கப் செய்து மறுமுனையில் கேட்பவருக்கு தெளிவாக கொடுக்கிறது.

அதே நேரத்தில் சுற்றிலும் இரைச்சல் இருந்தாலும் இந்த மைக்ரோபோன் அனைத்து வித சத்தங்களையும் உள்வாங்காது. செல்போனில் அடிப்பகுதி என்பதால் இரைச்சலை உள்வாங்குவதில் தடை இருக்கும். அதே நேரத்தில் நாம் பேசும் ஒலி மிகச்சரியாக துளை அருகே இருப்பதால் குரல் தெளிவாக எதிர் தரப்புக்கு கேட்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here