இந்த ஆண்டு 12,000க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் குடிநுழைவுத் துறையால் திருப்பி அனுப்பப்பட்டனர்- டத்தோ ரஸ்லின் ஜூசோ

இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் 29 வரை மொத்தம் 12,380 வெளிநாட்டவர்கள் குடிநுழைவுத் துறையால்நாடுகடத்தப்பட்டதாக அதன் இயக்குநர் ஜெனரல் டத்தோ ரஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.

அவர்களில் 9,606 ஆண்கள் மற்றும் 2,774 பெண்கள் அடங்குவர், அவர்களில் பெரும்பாலோர் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் மியன்மாரைச் சேர்ந்தவர்கள் என்று ரஸ்லின் கூறினார்.

“குறித்த வெளிநாட்டினர் திருப்பி அனுப்பப்பட்டதற்கு பிரதானமாக மூன்று வகை காரணங்கள் உள்ளன – சிறை தண்டனையை முடித்த வெளிநாட்டவர்கள், பல்வேறு குடிநுழைவு குற்றங்களுக்காக குடிவரவு திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் மற்றும் பிற அமலாக்க நிறுவனங்களால் குடிநுழைவு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட வெளிநாட்டவர்கள்” என்று அவர் கூறினார்.

திருப்பி அனுப்பப்படடவர்கள் தவிர, நாட்டிலுள்ள மூன்று தற்காலிக தடுப்பு மையங்கள் உட்பட 21 குடிநுழைவு டிப்போக்களில் மொத்தம் 11,650 சட்டவிரோத குடியேற்றவாசிகள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று, நேற்று சுங்கை பக்காப் தற்காலிக குடிநுழைவு தடுப்புக் முகாமை மூடும் விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

கடந்த பிப்ரவரி 15, 2021 இல் செயல்படத் தொடங்கியதில் இருந்து சுங்கை பக்காப் தற்காலிக தடுப்பு மையம் 2,224 கைதிகளைக் கையாண்டுள்ளது என்றார்.

கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், நாடு முழுவதும் உள்ள தடுப்புக் முகாம்களில் நெரிசலைக் குறைப்பதற்கும் இந்த டிப்போ ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டதாக ரஸ்லின் கூறினார், ஏனெனில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காலத்தில் வெளிநாட்டினரை திருப்பி அனுப்ப முடியாது இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட அந்நியத் தொழிலாளர்கள் மறுசீரமைப்பு திட்டம் 2.0 இந்த கீழ் 322,182 சட்டவிரோத குடியேறியவர்களும் 27,572 முதலாளிகளும் பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

நாட்டில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பது நினைவுகூரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here