தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் இரண்டாவது தடவையாக தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டார்

ஷா ஆலாம், 14வது பிரிவில் உள்ள ஒரு வணிக வளாக கட்டிடத்தில் இருந்து குதிக்க முயன்ற இளம்பெண் ஒருவரை , தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள் சமாதானப்படுத்தி, தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றினர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தீயணைப்புத் துறைக்கு காலை 11.42 மணிக்கு அழைப்பு வந்தது என்றும், தமது உறுப்பினர்கள் அங்கு வந்தபோது, ​​கட்டிடத்தின் கூரையில் இளம் பெண் அழுதுகொண்டிருப்பதைக் குழுவினர் கண்டனர் என்று, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் மோர்னி மாமட் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர் மாற்றுத்திறனாளி (OKU) அட்டை வைத்திருப்பவர் என்பதும், அவர் வணிக வளாகத்திலுள்ள ஒரு துணிக் கடையில் உதவியாளராகப் பணியாற்றியவர் என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

“கடந்த ஆண்டு மே மாதம் இந்தச் செயலைச் செய்ய முயன்றபோது தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்படடார் என்று விசாரணையில் கண்டறியப்பட்டது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், ஷா ஆலாம் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் இக்பால் இப்ராஹிம் கூறுகையில், பாதிக்கப்பட்டவர் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு (HTAR) கிளாங்கிற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here