ஆர்ட்டெமிஸ் 2 – நிலவுக்கு செல்வோரின் பெயர்கள் வெளியீடு

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் முதற்கட்ட சோதனை முயற்சியாக ஆர்ட்டெமிஸ் 1 ஆளில்லா விண்கலத்தை நாசா வெற்றிகரமாக அனுப்பியது.

இந்த நிலையில், ஆர்ட்டெமிஸ்-2 ராக்கெட் ஏவும் திட்டத்தை நாசா துவக்கியுள்ளது. இதில் நிலவுக்கு செல்ல உள்ள 3 விண்வெளி வீரர்களின் பெயர்களை நாசா வெளியிட்டுள்ளது. ஜெர்மி ஹேன்சன், விக்டர் க்ளோவர், ரீட் வைஸ்மேன், கிறிஸ்டினா ஹம்மக் கோச் ஆகியோர் நிலவுக்கு செல்வதாக நாசா தெரிவித்துள்ளது.

4 வீரர்களில் 3 அமெரிக்கர்கள் மற்றும் ஒரு கனடா விண்வெளி ஏஜென்சி வீரர் இடம்பெற்றுள்ளார். மேலும் இந்த திட்டத்தில் முதல் முறையாக பெண் விண்வெளி விராங்கனை கிறிஸ்டினா ஹம்மக் கோச் இடம்பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here