புனித வெள்ளி; ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் கூடினர்

இயேசு கிறிஸ்து மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்து மீட்பதற்காகவும், இறைவாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் துன்பங்கள் பல அனுபவித்து சிலுவையில் இறந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.

புனித வெள்ளி, பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி என்பது ஏசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவையில் இறந்து, மீண்டும் உயிர்த்தெழுந்ததையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படும் நிகழ்வாகும்.

இன்று புனித வெள்ளி கொண்டாட்டங்களை முன்னிட்டு, பினாங்கில் உள்ள தேவாலயங்களில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் அங்குள்ள் தேவாலயங்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

Lebuh Farquhar இல் உள்ள 237 ஆண்டுகள் பழமையான ஆஃப் தி அஸ்ம்ப்ஷன் தேவாலயத்தில், கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு இன்று மீண்டும் சிறப்பு பிரார்த்தனை மற்றும், சிலுவையை ஏந்திக் கொண்டு கிறிஸ்தவர்கள் சிலுவைப் பாதை ஊர்வலம் சென்றனர்.

புனித வெள்ளி இயேசு சிலுவையில் அறையப்பட்டு அவர் கல்வாரியில் இறந்ததை நினைவு கூர்கிறது.

புனித வெள்ளிக்குப் பிறகு, கிறிஸ்தவர்கள் ஏப்ரல் 8 ஆம் தேதி புனித சனிக்கிழமையைக் கொண்டாடுவார்கள், அதைத் தொடர்ந்து ஏப்ரல் 9 ஆம் தேதி உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) கொண்டாட்டங்களைக் கொண்டாடுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here