ஒரு காலை இழந்த பாஸ்கரனுக்கு 1000 ரிங்கிட் பற்றுச்சீட்டு.

(Our Johor Reporter கிருஷ்ணன் ராஜு)

ஸ்கூடாய்,

காலை இழந்துகுடும்பத்தை பிரிந்து தனியாக வாழும் பாஸ்கரனுக்கு ECONSAVE உதவி வழங்கியது.நீரிழிவு நோயினால் தன் வலது காலை இழந்த பாஸ்கரன் (வயது 68) தனிமையாக சிரமத்தில் வாழ்ந்து வருகிறார்.

குடும்ப பிரச்சினையால் 14 ஆண்டுகளாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் பாஸ்கரன் நான்கு ஆண்டுகளுக்கு முன் தன் வலது காலை இழந்தார்.
இப்பொழுது அவருக்கு வலது கண் பார்வை தெரியாது.

மனைவி தம் பிள்ளைகள் யாரும் கவனிக்காததால் சக்கர நாற்காலியில் நகர்ந்து சொந்தமாக சமையல் செய்து சாப்பிட்டு வருகிறார். சில சமயங்களில் அண்டை வீட்டார்களின் உதவியுடன் பாஸ்கரனுக்கு உணவு கிடைக்கிறது .அண்டை வீட்டார் தான் அவருக்கு உணவு வழங்கி வருகிறார்கள்.

பாஸ்கரனுக்கு பெம்பர்ஸ் மற்றும் அத்தியாவசாயப் பொருள் வாங்க பணம் நிறைய தேவைப்படுகிறது. ஆனால் அவருக்கு வருமானம் ஏதும் இல்லை. அவருக்கு சமூக நல இலாக்காவில் கிடைக்கும் சிறிய தொகையை மருத்துவ மனைக்குச் செல்ல போகக்குவரத்து செலவுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்.

பாஸ்கரனின் நிலையைக்கண்டு ECONSAVE தலைமை நிர்வாகி மாஸ் இம்ரான் ஆடாம் அவருக்கு ஏராளமான பெம்பர்ஸ் மற்றும் அத்தியாவசியப் பொருள்களும் வழங்கினார். மிக்க மகிழ்ச்சி அடைந்த அவர் ECONSAVE நிர்வாகத்திற்கும் உதவி பெற காரண மாயிருந்த மக்கள் ஓசை நிர்வாகத்திற்கும் தம் நன்றியைத் தெரிவித்துக்கொள் கின்றேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here