பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த இடைத்தரகர்களை நம்பியிருப்பதைக் குறைக்க வேண்டும் -பிரதமர்

சந்தையில் பொருட்களின் விலைகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமாயின் இடைத்தரகர்களை நம்பியிருப்பதை குறைத்துக்கொண்டால் போதும் என்கிறார் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்.

“விலை உயர்வுக்கு இடைத்தரகர்தான் காரணம். அவர்கள் நியாயமான லாபம் ஈட்டினால், விலைகள் கட்டுக்குள் இருக்கும்” மாறாக அவர்கள் அளவிற்கதிகமாக லாபத்தை வைப்பதனால் பொருட்கள் விலை அதிகரிக்கிறது” என்று பிரதமர் கூறினார்.

விளைபொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு, உதாரணமாக அக்ரோ ரஹ்மா திட்டத்தின் கீழ், காய்கறிகள், இறைச்சிகள் போன்ற பொருட்களை நேரடியாக வேளாண்மை செய்ப்பவரிடமிருந்து கிடைப்பதால், அவற்றின் விலை குறைவாக இருப்பதை நிதி அமைச்சருமான அவர் சுட்டிக் காட்டினார்.

எவ்வாறாயினும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளை இவ்வாறு கட்டுப்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here